Aurora Borealis: வடதுருவத்தின் அழகியல் நிகழ்வு; வானில் நடனமாடிய ஒளி-அரோரா பொரியாலிஸ்!
பூமியின் வட துருவத்தில் வானில் பல வண்ணங்களில் ஒளிவெள்ளம் தோன்றும் நிகழ்வு 'Aurora Borealis’, 'Northern lights’ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. இது வானியல் ஆர்வலர்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்வாக இருக்கிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்தத் துருவ ஒளியில், வெளிர்பச்சை நிறம் பொதுவானது. அதோடு, சிவப்பு, நீலம், ஊதா, இளஞ்சிவப்பு ஆகிய வண்ணங்களும் தோன்றுவது உண்டு. இம்முறை பிங்க் நிறமும் காணப்பட்டது.
ole Alabama Cleveland, OH ஆகிய ஐரோப்பிய நாடுகள், அமெரிக்காவில் சில பகுதிகளில் இதை காண முடியும். வட துருவத்திற்கு அருகில் உள்ள நாடுகளில் இதை காணலாம். இந்நிகழ்வின்போது வானில் பல வண்ணங்கள் தோன்றி நடனமாடும். பார்ப்பதற்கு வியக்கவைக்கும் அளவிற்கு இருக்கும்.
பூமி ஒரு சட்டக்காந்தம்போலச் செயல்படுகிறது. அதன் காந்த வடதுருவம் தெற்கிலும், காந்தத் தென்துருவம் வடக்கிலும் உள்ளன.
சூரியனிலிருந்து வரும் துகள்கள் காந்தவிசைக் கோடுகள் உள்ள மண்டலத்தை ஊடுருவி செல்லும்போது, புவிக் காந்தப்புலத்தால் முடுக்கம்பெறும். அப்போது வளிமண்டலத்திலுள்ள நைட்ரஜன், ஆக்சிஜன் அணுக்களுடன் மோதி உண்டாகு,ம் நிகழ்வே அரோரா போரியாலிஸ்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -