Flying Hotel Concept: ஐந்தாயிரம் பேருடன் வானில் பறக்கும் பைவ் ஸ்டார் ஹோட்டல் கான்செப்ட்!
இந்தப் பறக்கும் ஹோட்டலில் 5000 பேர் தங்கலாம். நீச்சல் குளம், ஷாப்பிங் மால் உள்ளிட்ட பல வசதிகள் இருக்கின்றன.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appவிமானம் நவீன வசதிகளுடன் சொகுசு ஹோட்டலாக இருந்தால் எப்படி இருக்கும்? அதற்கான வடிவமைப்பை உருவாக்கி அசத்தியிருக்கிறார் Hashem Al-Ghaili.
ஏமன் நாட்டைச் சேர்ந்த Hashem Al-Ghaili என்பவர் (video producer and science communicator) சமீபத்தில் வெளியிட்டிருக்கும் வீடியோ ஒன்று இணையதளத்தில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.
இந்த ஹோட்டலில் தங்குபவர்களுக்கு, எலக்ட்ரிக் ஜெட் சேவையும் வழங்கப்படும். எலக்ட்ரிக் ஜெட் மூலம் உலகின் எங்கு வேண்டுமானாலும் சென்றுவிட்டு திரும்ப இந்த ஹோட்டலுக்கு வரலாம்.
ஹோட்டல் நியூக்ளியர் (அணு ஆற்றல்) திறன் கொண்டு இயக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதாவது வான் மேகங்களுக்கு நடுவில் ஒரு வாரம் தங்கியிருந்தால் எப்படி இருக்கும்? அ
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த பறக்கும் ஹோட்டலை இயக்கும் விமானி (பைலட்) கிடையாது. இதற்கு Artificial Intelligence மூலம் இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், அணு ஆற்றல் மூலம் செயல்படுவதால், இதற்கு எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் நிலை வரும் வாய்ப்புகள் இல்லை.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -