Trichy Airport New Terminal : அடடே..திருச்சி விமான நிலையத்தின் புது முனையத்தில் இவ்வளவு வசதிகளா?
தற்போது கட்டப்பட்டுள்ள புதிய முனையம் ரூ.1200 கோடி செலவில் கடந்த 2019ம் ஆண்டு பணிகள் தொடங்கியது. இந்த புதிய முனையம் மொத்தம் 134 ஏக்கரில் 75 ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. இதில் 4 நுழைவாயில்கள், 12வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅதேபோல் பயணிகள் வௌியேற 4 வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் 60 செக் இன் கவுன்ட்டர்கள் கட்டப்பட்டுள்ளது. உள்நாட்டு பயணிகளின் உடைமைகளை சோதனை செய்ய 3 எக்ஸ்ரே இயந்திரங்கள், வௌிநாட்டு பயணிகளின் உடைமைகளை சோதனையிட 4 எக்ஸ்ரே இயந்திரங்களும் பொருத்தப்பட்டுள்ளது.
6 கன்வேயர் பெல்ட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. பயணிகளின் குடியேற்ற சோதனைக்கு 58 கவுன்ட்டர்கள் கட்டப்பட்டுள்ளது.
பயணிகள் விமானத்தில் இருந்து இறங்கி நேரடியாக விமான நிலையத்திற்குள் வருவதற்கு 10 வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்குள்ளேயே பேருந்துகளில் அழைத்து வருவதற்காக 2 வழித்தடங்கள் உள்ளது.
தற்போது வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் உள்நாட்டு பயணிகள் 1,500 பேரையும், வௌிநாட்டு பயணிகள் 4,000 பேரையும் கையாள முடியும்.
750 கார்கள் நிற்கும் வகையில் பார்க்கிங் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நவீன முறையில் விமானங்களை அதன் குறிப்பிட்ட எல்லைக்குள் நிறுத்துவதற்கான கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -