Governor RN Ravi : மனைவியுடன் ஸ்ரீரங்கம் கோயிலை சுத்தம் செய்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி!
108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் தரிசனம் செய்வதற்காக இன்று ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு வந்தார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅவருக்கு கோவில் சார்பாக பூரண கும்ப மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அவருக்கு அங்கு இருந்த பக்தர்கள் வரவேற்பு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து அவர் மூலவர் சன்னதியில் சாமி தரிசனம் செய்தார். பின்னர், தாயார் சன்னதி வந்து தாயாரை வழிபட்டார்
கோயில் நிர்வாகம் சார்பாக, பள்ளிகொண்ட ரங்கநாதரின் திருவுருவப்படம் பரிசாக கொடுக்கப்பட்டது
கோவில் முன்புறமுள்ள குப்பைகளை தூய்மை செய்யும் பணியில் அவரும் அவரது மனைவியும் ஈடுபட்டனர். ஸ்ரீமேட்டழகிய சிங்கர் சன்னதி படிக்கட்டுகளை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்தார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -