Alanganallur Jallikattu: உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - புகைப்படத் தொகுப்பு!

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று உறுதி மொழியுடன் துவங்கிய நிலையில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து போட்டிகளை தொடங்கி வைத்தார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
வீரர்கள் உற்சாகத்துடன் மாடுகளை அடக்க முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது...

போட்டியில் மாலை வரை 10 சுற்றுகள் ஆக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு சுற்றிலும் 50 வீரர்கள் களமிறங்குவர். அதில் அதிக காளைகளைப் பிடிக்கும் வீரர் அடுத்தடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவார்.
கம்பீரத்துடன் பாயும் காளை...
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி 3ஆவது சுற்றில் போட்டியிட் நடுவே மாடு அடக்கிகொண்டிருந்தபோது சண்டையிட்ட வீரரை விரட்ட சென்ற சார்பு ஆய்வாளரை மாடு முட்டி தூக்கி எறிந்ததால் பரபரப்பு- பாதுகாப்புடன் போட்டிகள் நடைபெற்று வருகின்றன..
1200 காளைகளும்,, 800 மாடுபிடி வீரர்களும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்கத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
போட்டிகளில் வெற்றி பெறும் காளைகளின் உரிமையாளர்களுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் தங்க நாணயம் சைக்கிள் பீரோ கட்டில் மெத்தை பித்தளை பாத்திரங்கள் அண்டா உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்படுகின்றன.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -