Elephant Pongal : மாட்டு பொங்கல் தெரியும்.. யானை பொங்கல் பற்றி கேள்விப்பட்டிருக்கீங்களா?

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட டாப்சிலிப் பகுதியில் யானை பொங்கல் கொண்டாடப்பட்டது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
டாப்சிலிப் பகுதிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

கோழி கமுத்தி யானைகள் முகாமில் நடந்த யானை பொங்கல் விழாவில் 26 வளர்ப்பு யானைகள் பங்கேற்றன.
கோழிகமுத்தி யானைகள் முகாமில் வனத்துறையினரால் 26 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
வனத்திற்கும், வனத்துறையினருக்கும் உதவியாக இருக்கும் யானைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக யானைப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
யானைகளுக்கு பிடித்த உணவான கரும்பு, வாழை ஆகியவை வழங்கப்பட்டன.
கோழிகமுத்தி யானைகள் முகாமில் யானை பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பழங்குடிகள் முறைப்பட்டி மண் பானையில் பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு படைக்கப்பட்டது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -