Tiruvannamalai Deepam:'அண்ணாமலையாருக்கு அரோகரா’ - கார்த்திகை மகாதீபம்!

கார்த்திகை மாதம் என்றாலே அனைவரது நினைவுக்கும் முதலில் வருவது கார்த்திகை தீபத்திருவிழாவே ஆகும். கார்த்திகை தீபத் திருவிழா தமிழ்நாட்டிலே சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் ஒன்றான திருவண்ணாமலையில் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம் ஆகும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலையில் 2,668 அடி உயரமுள்ள மலையின் உச்சியில் இன்று மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது. ஜோதி வடிவமாக அண்ணாமலையார் காட்சியளிக்கிறார்.

மலை அடிவாரத்தில், அண்ணாமலையார் ஆனந்த தாண்டவம் ஆடி பக்தர்களுக்கு காட்சியளித்ததை தொடர்ந்து, கீழே தீபம் ஏற்றப்பட்டது.
ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அண்ணாமலையாரை தரிசித்தனர். மாகதீபத்தை வழிப்பட்டனர்.
புராண காலத்தில் திருமால் மற்றும் பிரம்மா ஆகிய இருவருக்கிடையே யார் பெரியவர் என போட்டி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சிவபெருமான் அக்னி உருவெடுத்தார். யார் முதலில் தலையையும் மற்றும் அடியையும் கண்டுபிடிக்கிறார்களோ அவர்கள் பெரியவர் என சிவபெருமான் அவர்கள் முன் அசாரியாக தெரிவித்தார் என்ற புராண கதை சொல்கிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -