Soorasamharam 2024: திருச்செந்தூரின் கடலோரத்தில் விண்ணைப்பிளந்த அரோகரா சத்தம்! - சூரசம்ஹார புகைப்படங்கள்!
புராண காலத்தில் சூரபத்மன் அசுரன் வாழ்ந்து வந்தான். சூரபத்மன் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்து 108 யுகம் உயிர் வாழவும் 1008 அண்டம் அரசாளவும் இந்திர ஞாலம் எனும் தேரையும் வரமாக பெற்றான். மேலும் சிவபெருமானிடம் சூரபத்மன், சாகாவரம் வேண்டும் என கேட்க அதற்கு சிவபெருமான் அப்படி ஒரு வரத்தை கொடுக்க முடியாது என கூறவே, ஒரு பெண்ணின் வயிற்றில் பிறக்காத பிள்ளையால் தான் தனக்கு அழிவு வர வேண்டும் என கேட்க சிவபெருமானும் அவ்வாறே அருளி விட்டு செல்கிறார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசூரபத்மன் கிடைத்த வரத்தை வைத்து மக்களுக்கு நல்லது செய்யாமல், தேவர்களை அடிமைப்படுத்தி நடத்தி வந்தான்.இந்திரன் முதல் அனைத்து தேவர்களையும் சிறை பிடித்து சூரபத்மன் வெற்றி கொண்டான். வேறு வழி இல்லாமல் அனைத்து தேவர்களும் சிவபெருமானிடம் சென்று தங்களை காத்தருளுமாறு வேண்டினர்.
அதன்படி தனது தாயார் பார்வதியின் அறிவுரையின்படி சூரபத்மனை போரில் விழுத்தி தேவர்களை விடுவிக்க முருகப்பெருமாள் முடிவு செய்தார். தனது சேனைத்தலைவரான வீரபாகுவை சூரபத்மனிடம் தூது அனுப்பி அவனைத் திருந்தும்படி எச்சரித்தார். ஆனால், சூரபத்மன், பாலகன் முருகனா எனக்கு எதிரி! யார் வந்தாலும் தேவர்களை விடுவிக்க போவதில்லை போரை சந்திக்க தயார் என சூரபதமன் சூலுரைத்தார்.
இதையடுத்து, ஆறு நாட்கள் நடைபெற்ற சூரசம்ஹாரத்தின் முடிவில் முருகன் மாமரமாக நின்ற சூரனை தன் சக்தியாகிய வேலினால் பிளந்தார். பிளவுபட்ட மாமரம் சேவலும் மயிலுமாக மாறவும், சேவலை கொடியாகவும் மயிலை வாகனமாகவும் முருகன் ஏற்றுக்கொண்டார். இன்றும் ஆண்டுதோறும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் இதுதான் நடைபெற்று வருகிறது.
திருச்செந்தூர்: சூரச்ம்ஹாரம் நிகழ்வு இன்று நடைபெறுகிறது
குவிந்த பக்தர்கள்: தலையா.! கடலலையா.!
- - - - - - - - - Advertisement - - - - - - - - -