Box Office Collection: ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்ற அமரன் திரைப்படம் - வசூல் எவ்வளவு தெரியுமா?
ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அமரன். மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கையைத் தழுவி இப்படம் உருவாகியுள்ளது.
அமரன் திரைப்படம் வெளியான முதல் நாளில் இந்தியளவில் 42 கோடி வசூலித்திருந்தது. சிவகார்த்திகேயன் நடித்து இதுவரை வெளியான படங்களில் முதல் நாளில் அதிக வசூல் ஈட்டிய படமாக அமரன் சாதனை படைத்துள்ளது.
சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாகவும் அவர் மனைவி இந்துவாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த ஆண்டு தீபாவளி ரேஸில் போட்டியே இல்லாமல் அமரன் திரைப்படம் வெற்றிபெற்றுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.
தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு , இந்தி , கன்னடம் , மலையாளம் என அனைத்து மொழிகளிலும் அமரன் படத்திற்கு ரசிகர்களிடம் பெரியளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. பெரும்பாலும் காமெடி ரோல்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயன் இந்த படத்தில் முழுக்க முழுக்க சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தமிழி திரையுலகம் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் பலர் இந்த படத்தை பாராட்டியுள்ளார்கள். அமரன் திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ 155 கோடி வசூல் செய்துள்ளதாக சாக்னிக் தளம் தகவல் வெளியிட்டுள்ளது.