“நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை...“ பி.சுசிலாவிற்கு முன் பாட்டு பாடி காட்டிய முதல்வர் ஸ்டாலின்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (21.11.2023) சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைகழகத்தின் இரண்டாம் பட்டமளிப்பு விழாவில் முதன்மை விருந்தினராகப் பங்குபெற்றார்.
அந்த கல்லூரியில் படித்த மாணவ மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
மதிப்புறு முனைவர் பட்டத்தை திரையிசை பின்னணிப் பாடகி பி.சுசீலாவிற்கு வழங்கினார்.
கர்நாடக இந்துஸ்தானி மற்றும் மேலைநாட்டு இசைக் கலைஞர் பி.எம் சுந்தரத்திற்கு முனைவர் பட்டத்தை வழங்கிய போது..
இந்த விழாவில் தமிழ் வளர்ச்சி, கலை பண்பாடு மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் மணிவாசன், கர்நாடக கலைஞரும், சமூக செயற்பாட்டாளருமான டி.எம்.கிருஷ்ணா ஆகியோர் கலந்து கொண்டனர்.
அத்துடன், தெய்வத்தின் தெய்வம் படத்திலிருந்து, “நீ இல்லாத உலகத்திலே நிம்மிதி இல்லை” என்ற பாடலை பாடி காட்டினார் முதல்வர் ஸ்டாலின். முன்னதாக நேர்காணல் ஒன்றில் கலந்த கொண்ட ஸ்டாலின் அந்த பாடல் அவருக்கு மிகவும் பிடிக்கும் என கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.