Egg Pizza Recipe : டக்குனு ஒரு ப்ரேக்ஃபாஸ்ட் ரெசிபி..முட்டை பிட்சாவை இன்றே செய்யுங்கள்!
தேவையான பொருட்கள் : முட்டை - 6, உப்பு - 1/2 தேக்கரண்டி, மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி, பூண்டு - 1 தேக்கரண்டி துருவியது, ஆலிவ் எண்ணெய் - 2 தேக்கரண்டி, தக்காளி, கொத்தமல்லி இலை - சிறிதளவு நறுக்கியது, சீஸ் - 6 துண்டு, மிக்ஸ்டு ஹெர்ப்ஸ், இட்டாலியன் சீசனிங், சில்லி பிளேக்ஸ்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை: முதலில் தக்காளியை வட்ட வட்டமாக நறுக்கி கொள்ளவும். பின்பு ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் உப்பு, மிளகு தூள், துருவிய பூண்டு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பிறகு கடாயில் ஆலிவ் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் அதில் சிறிதளவு முட்டை கலவையை ஊற்றவும். பின்பு நறுக்கிய தக்காளி துண்டுகளை முட்டையின் மீது வைத்து அதன் மேல் சிறிதளவு மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் மற்றும் சில்லி பிளேக்ஸை தூவவும்.
அடுத்து மீதம் உள்ள முட்டை கலவையை தக்காளியின் மீது ஊற்றவும். பிறகு நறுக்கிய கொத்தமல்லி இலையை தூவி மூடி வைத்து வேகவிடவும்.
முட்டை வெந்ததும் அதன் மேல் சீஸை துருவி விடவும். கடைசியாக இட்டாலியன் சீசனிங் மற்றும் சில்லி பிளேக்ஸை தூவி கடாயை மூடி சீஸ் உருகும் வரை 3 நிமிடம் வேகவிடவும்.
அவ்வளவு தான் சுவையான முட்டை பீட்சா தயார்!
- - - - - - - - - Advertisement - - - - - - - - -