Tirupur Power Cut: திருப்பூர் மாவட்ட மக்களே.. நாளைய(13.10.25) மின் தடை.. முழு விவரம்
Tirupur Power Cut (13.10.25): திருப்பூர் மாவட்டத்தில் நாளை (அக்டோபர் 13 ஆம் தேதி) பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை செய்யப்படுகிறது. அதனால மக்களே நீங்கள் முன்கூட்டியே குடிநீர் பிடித்தல், தண்ணீர் நிரப்பிக் கொள்ளுதல் போன்ற முக்கியமான அத்தியாவசிய தேவைகளை செய்துக்கோங்க. அப்படியே உங்க ஏரியாவும் லிஸ்ட்ல இருக்கான்னு செக் செய்து கொள்ளுங்க.
திருப்பூர் மாவட்டத்தில் நாளை (அக்டோபர் 13) இந்த பகுதியில் எல்லாம் மின்சார விநியோகம் இருக்காத. மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி மாவட்டத்தில் சில முக்கிய இடங்களில் மின் தடை மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதனால் குறிப்பிட்ட பகுதிகளில் அன்றைய தினம் காலை 9.00 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் மின்வாரிய தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்த பராமரிப்பு பணிகளின் போது சம்பந்தப்பட்ட மின் பாதைகளை சேர்ந்த பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.
உடுமலை மின்நகர், இந்திரா நகர், சின்னப்பன் புதூர், ராஜாவூர், ஆவல்குட்டை, சேரன் நகர், குமாரமங்கலம், தாந்தோணி, வெங்கிட்டாபுரம், தூங்காவி, ராமேகவுண்டன் புதூர், மெட்ராத்தி, போளரப்பட்டி, கே.கே.புதூர் ஆகிய இடங்களில் மின்சாரம் நிறுத்தப்படும்
கரடிவாவி, கரடிவாவிபுதூர், கோடங்கிபாளையம் ஒரு பகுதி, காரணம்பேட்டை, மல்லேகவுண்டன்பாளையம், ஊத்துக்குளி, வேப்பங்குட்டைபாளையம், புளியம்பட்டி, கே.கிருஷ்ணாபுரம், மத்தநாயக்கன்பாளையம், அய்யம்பாளையம், ஆறாக்குளம், கே.என்.புரத்தின் ஒரு பகுதி, பருவாயின் ஒரு பகுதி
இந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் அதற்கேற்ப திட்டமிட்டு அன்றாட பணிகளை நடவடிக்கைகளை எடுக்குமாறு மின்சார வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது