Cotton Candy Ban : தமிழ்நாட்டிலும் பஞ்சு மிட்டாய்க்கு தடை..காரணம் தெரியுமா?
பூங்காக்கள், கண்காட்சிகள், கடற்கரைகள் என எந்த பொது இடத்திற்கு சென்றாலும் நம் கண்களில் முதலில் படுவது பஞ்சுமிட்டாய் தான். ஆனால் இந்த அனைவருக்கும் பிடித்தமான பஞ்சு மிட்டாய் விற்பதற்கு புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு அரசுகள் தடை விதித்துள்ளன. இதற்கு காரணம் என்னவென்று தெரியுமா?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபஞ்சு மிட்டாய்களை கண்கவர் நிறங்களில் மாற்றுவதற்காக அவற்றில் `ரோடமைன் பி’ என்ற நிறமி பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த நிறமியை இண்டஸ்ட்ரியல் டை என்றும் அழைக்கின்றனர். மேலும் இந்த நிறமியில் புற்றுநோயை உண்டாக்கும் ஆபத்தான மூலப்பொருட்களும் கலந்து இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசுகள் பஞ்சு மிட்டாய் விற்பவர்களிடம் அவற்றை கைப்பற்றி ஆய்வுகளை மேற்கொண்டதில் இந்த நிறமி பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது.
இந்த நிறமி குழந்தைகளுக்கு மிக மோசமான ஆரோக்கிய பிரச்சினைகளை உருவாக்கலாம் என்பதால் அரசு பஞ்சு மிட்டாய் விற்வதற்கு தடை விதித்துள்ளது.
தடைக்கு பிறகு பல இடங்களில் நிறமி சேர்க்காத வெள்ளை நிற பஞ்சு மிட்டாய்கள் விற்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -