Virender Sehwag : 'இந்தியா- ஆஸ்திரேலியா இறுதி போடிக்கு செல்லும்..' அடித்து பேசிய சேவாக்!
2023 உலக கோப்பை போட்டி அக்டோபர் மாதம் இந்தியாவில் தொடங்க உள்ளது. இதற்கான அட்டவணை நேற்று ஐசிசி நடத்திய நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்த நிகழ்ச்சியில் பல கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டனர். அதில் இந்திய முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் சேவாக் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர் 2011 ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பையை சச்சின் டெண்டுல்கர்காக வென்றோம் என்று கூறினார்.
“தற்போது அதே இடத்தில் விராட் கோலி இருக்கிறார். அதனால் அவருக்கு இந்த உலக கோப்பையை வெல்ல வேண்டும். அதுமட்டுமின்றி இந்தியாவில் போட்டி நடப்பதால் ஆசிய அணிகளுக்கே வாய்ப்புள்ளது என்ற பேச்சை நான் ஏற்கவில்லை. ஐபிஎல் போட்டிகளில் வெளிநாட்டு வீரர்களே பெரும்பாலும் அதிரடியாக ஆடி ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.அதனால் அவர்களுக்கும் வாய்ப்புள்ளது” என்றார் சேவாக்.
மேலும் பேசிய அவர்,“விராட் கோலி ஒவ்வொரு போட்டிக்கும் 100 சதவீதத்திற்கு மேலான பங்களிப்பை வெளிப்படுத்த கூடியவர். இந்த உலக கோப்பையில் இன்னும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்”.
“எனது கணிப்பின்படி இந்தியா, ஆஸ்திரேலியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகள் அரை இறுதி போட்டிக்கு தகுதி பெறும். இந்தியா- ஆஸ்திரேலியா இறுதி போடிக்கு செல்லும்” என திட்டவட்டமாக பேசினார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -