Ajith Kumar : 'அவர் ஸ்டைல பாருயா...’ - ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம்!
நடிகர் அஜித் அமராவதி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதை தொடர்ந்து சிறிய இடைவெளிக்கு பிறகு நடிகர் விஜய்யுடன் ராஜாவின் பார்வையிலே படத்தில் நடித்தார் பின்பு. அதே அண்டு வெளியான ஆசை படம் மூலம் பிரபலமானர்.
அதேபோல் காதல் கோட்டை, அவள் வருவாளா, காதல் மன்னன் , அமர்களம் எனத் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.
நடிகர் அஜித் சமீபத்தில் புதிதாக பைக் சுற்றுலா நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். ‘ஏகே மோட்டோ ரைடு” என இந்நிறுவனத்துக்கு பெயரிடப்பட்டது.
இவர் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் குறித்த அப்டேட் எதும் வரதாதால் அஜித்தின் ரசிகர்கள் சோகத்தில் உள்ளார்.
அதை சரி செய்யும் வகையில் நடிகர் அஜித்தின் புதிய புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.