புகழ் பெற்ற ஆன்மீகவாதி பங்காரு அவர்கள் இன்று உடல் நலக்குறைவால் காலமானார்
புகழ் பெற்ற ஆன்மீகவாதி பங்காரு அடிகளார் இன்று உடல் நலக்குறைவால் காலமானார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதிண்டிவனம் செல்லும் வழியில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலை கட்டியவரும் ஆதிபராசக்தி கோவிலின் தலைமை ஆன்மீகவாதியாக இருந்து வரும் பங்காரு ஆன்மீக தளத்தில் பல்வேறு மாற்றங்களை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் ஏற்படுத்தியவர்.
பெண்கள் கோவிலுக்குள் நுழையலாம் ஆனால் கருவறைக்குள் நுழையக்கூடாது என்ற விதியை தகர்த்தெறிந்து பெண்களை கோவில் கருவறைக்குள் சென்று அம்மனுக்கு அபிஷேகம் செய்யும் அளவுக்கு மாற்றங்களை கொண்டுவந்தவர்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கென்று பெண் பக்தர்கள் கூட்டம் தமிழ்நாட்டில் உள்ளது.
தமிழ் நாடு மட்டும் இல்லாமல் ஆந்திர கர்நாடாக கேரளா போன்ற மாநிலங்களில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கென்று பக்தர்கள் உள்ளனர்.
அவரின் பல்வேறு சாதனைகளை பாராட்டி 2019ஆம் ஆண்டின் போது மத்திய அரசு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.இரண்டு மாதங்களாக உடல் நல குறைவால் அவதிப்பட்டு வந்த பங்காரு அடிகளார் இன்று காலமானார்.பங்காரு அடிகளாரின் உடல் நாளை நல்லடக்கம் செய்யப்படுகிறது இதில் முதலமைச்சர் ஸ்டாலின் நாளை பங்காரு அடிகளாருக்கு நேரில் அஞ்சலி செலுத்தவுள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -