Kadai Paneer Recipe: கடாய் பனீர் எப்படி செய்வது? இதோ ரெசிபி!
ஒரு கடாயில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை வதக்கி, பின்பு அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம் குடமிளகாயை பொடியாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
பனீரை சிறிய துண்டுகளாக நறுக்க வேண்டும். ஒரு கடாயில் வெண்ணெய் ஊற்றி பின்பு தாளிக்க பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.
நறுக்கி வைத்துள்ள குடைமிளகாய் மற்றும் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இஞ்சி பூண்டு விழுதை இதனுடன் சேர்க்க வேண்டும். ஏற்கனவே வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கி அரைத்து வைத்துள்ள விழுதை இதில் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கி விட வேண்டும். பின்பு இதனுடன் இரண்டு ஸ்பூன் மிளகாய் தூள் சேர்க்க வேண்டும்.
இதனுடன் ஒரு ஸ்பூன் பனீர் பட்டர் மசாலா மற்றும் உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து கலவையை கொதிக்க விட வேண்டும்.பின்பு நறுக்கிய பன்னீர் துண்டுகளை சேர்த்து 5 நிமிடம் கழித்து இறக்க வேண்டும். இப்போது சுவையான கடாய் பனீர் ரெடி.
பனீர் ஆன்டிஆக்ஸிடண்ட் நிறைந்துள்ளது. புரதம் தவிர, வைட்டமின்கள் ஏ, பி-1, பி-3, பி-6, செலினியம், வைட்டமின் ஈ, போன்ற பல சத்துக்களும் பனீரில் காணப்படுகின்றன.
வை ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன, இதன் காரணமாக தோல் ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் மாறும்.