ஒருவருட காத்திருப்பு... ரசிகர்களை சர்ப்ரைஸ் செய்த லியோ
பல சர்ச்சைகளை கடந்து இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது லியோ திரைப்படம். லியோ திரைப்படம் இந்தியா மட்டும் அல்லாமல் அமெரிக்கா, இங்கிலாந்து ,ஸ்ரீ லங்கா , மலேசியா , சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபடம் முழுக்க ஆக்ஷன் ஆக்ஷன் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மிரட்டியுள்ளார்.படத்தின் அதிரடியான சண்டைக்காட்சிகளை படத்தின் முன்னோட்டத்தில் காட்சி படித்தியிருந்த இயக்குனர் படத்தின் சர்ப்ரைஸ்க்காக சில காதாபாத்திரங்களை ட்ரைலரில் காண்பிக்காமல் படத்தில் காண்பித்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.
ரசிகர்கள் எதிர்பார்ப்பை பெரிய அளவில் பூர்த்திசெய்யும் விதமாக ஆக்சன் சீனில் அறிமுகப்படுத்தப்பட்ட மடோனா செபாஸ்டின் சண்டைக்காட்சிகளில் கலக்கியிருந்தார்.
இவரின் ஆக்சன் சீனை இயக்குனர் லோகேஷ் தரமாக செதிக்கிருந்ததை தியேட்டரில் இருந்த ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.
கைதி படத்தில் புதிதாக பணிமாற்றம் செய்யப்பட்ட காவல்துறை ஏட்டாக நடித்திருந்த ஜார்ஜ் மரியன்[நெப்போலியன்] லியோ படத்திலும் அதே நெப்போலியன் வேடத்தில் நடித்து பட்டையை கிளப்பியுள்ளார்.
நடிகர் விஜய்வுடன் ஆக்சன் சீன்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -