PM Narendra Modi:விவேகானந்தர் நினைவிடத்தில் தியானம் செய்யும் பிரதமர் நரேந்திர மோடி - புகைப்பட தொகுப்பு!
சுவாமி விவேகானந்தர் தியானம் செய்த விவேகானந்தர் பாறை நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (30.05.2024) முதல் தியானம் செய்து வருகிறார். அது தொடர்பான புகைப்படங்கள் பாரதிய ஜனதா கட்சி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.
ஓம் என்ற மந்திரத்தின் முன்பு நேற்று (30.05.2024) மாலை சுமார் 6.45 மணியளவில் விவேகானந்தர் பாறை நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி தியானத்தை தொடங்கிய நிலையில், இன்று (31.05.2024) மாலை வரை தியானத்தை தொடர்கிறார். 48 மணி நேர தியானத்தை மேற்கொள்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
தியான நேரத்தில் பிரதமரின் உணவு, தண்ணீர் ஆகியவற்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி
கன்னியாகுமரி கடற்கரையில் காலையில் சூரிய உதயத்தின் போது நரேந்திர மோடி..
இந்த தியானத்தின்போது திரவ உணவை மட்டுமே பிரதமர் மோடி எடுத்துக்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவேகானந்தனர் பாறையில் தியானம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி,வெறும் தேங்காய் தண்ணீர் மற்றும் திராட்சை ஜூஸ் மட்டுமே உணவாக எடுத்துக்கொள்கிறார்.
இந்த தியான் நேரத்தில் பிரதமர் மோடி மவுன விரதம் இருப்பார் என்றும் தியான அறையை விட்டு வெளியே வரமாட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.