Udhayanidhi Stalin : சேலம் அரசு துவக்கப்பள்ளியில் உணவின் தரத்தை ஆய்வு செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தமிழக முழுவதும் அறிமுகப்படுத்தி செயல்படுத்தப்பட்டு வருகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதிங்கள், வியாழக்கிழமை ஆகிய இரண்டு நாட்களில் உப்புமாவும், செவ்வாய், வெள்ளி ஆகிய இரண்டு தினங்களுக்கு கிச்சடி உடன் இனிப்பு உணவாக வழங்கப்படுகிறது. புதன்கிழமை ஒருநாள் பொங்கல் வழங்கப்பட்டு வருகிறது.
சேலம் நெத்திமேடு பகுதியில் உள்ள அரசு துவக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகளை குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டு உணவின் தரத்தை ஆய்வு செய்தார்.
பள்ளி வகுப்பறைகள், கழிவறைகள் உள்ளிட்ட வசதிகள் குறித்தும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாணவர்களின் வருகை பதிவேடு முறையாக பராமரிக்கப்படுகிறதா? சுகாதாரமான முறையில் உணவு பரிமாறப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்தார்.
சேலம் அரசு துவக்கப்பள்ளி மாணவர்களுடன் உரையாடும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
அமைச்சர் உதயநிதி, பள்ளி ஆசிரியர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -