Michaung Cyclone : நாட்கள் கழிந்தும் வெளியேறாத வெள்ள நீர்..அவதிப்படும் சென்னை மக்கள்!
கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிக்ஜாம் புயலாக டிசம்பர் 3 ஆம் தேதி மாறியது. இதனால் தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. (Photo Credits : PTI)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசென்னையில் கிட்டதட்ட 24 மணி நேரத்துக்கும் அதிகமாக சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இந்த புயலானது ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் அருகேயுள்ள பாபட்லா என்னும் இடத்தில் நேற்று கரையை கடந்தது. (Photo Credits : PTI)
இந்த புயலால் பெய்த கனமழையால் சென்னையின் அனைத்து இடங்களிலும் தண்ணீர் தேங்கியது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் வீடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். (Photo Credits : PTI)
புயல் கடந்து இரண்டு நாட்கள் கழிந்த நிலையிலும் சில பகுதிகளில் வெள்ளநீர் வடியாமல் தேங்கியே நிற்கிறது. (Photo Credits : PTI)
இதனால் மக்களுக்கு ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. (Photo Credits : PTI)
பல பகுதிகளில் வெள்ளநீர் வடியாமல் இருப்பதால் மக்கள் அத்தியாவசிய தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாமல் தவிக்கின்றனர். (Photo Credits : PTI)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -