Potato Onion Pakoda Recipe : 5 நிமிடம் போதும்..காரசாரமான மொறுமொறு ஸ்நாக்ஸை வீட்டிலேயே செய்யலாம்!
தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு - 3, வெங்காயம் - 1, பச்சைமிளகாய் - 2, இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி, மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி, சீரக தூள் - 1 தேக்கரண்டி, சாட் மசாலா தூள் - 1 தேக்கரண்டி, ஆம்சுர் தூள் - 1/2 தேக்கரண்டி (விரும்பினால்), உப்பு - 1 தேக்கரண்டி, பெருங்காய தூள் - 1/4 தேக்கரண்டி, ஓமம் - 1/2 தேக்கரண்டி, மைதா - 1/4 கப், சோள மாவு - 2 மேசைக்கரண்டி, கடலை மாவு - 1 மேசைக்கரண்டி, அரிசி மாவு - 1 மேசைக்கரண்டி, எண்ணெய் - பொரிப்பதற்கு.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமுதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து அதில் துருவிய உருளைக்கிழங்கு சேர்த்து இரண்டு முறை கழுவி கொள்ளவும்.
பிறகு கழுவிய உருளைக்கிழங்கு மற்றும் நறுக்கிய வெங்காயத்தையும் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களையும் சேர்த்து நன்றாக கிளறி கொள்ளுங்கள்.
பிறகு ஒரு பாத்திரத்தில் எண்ணெய்யை சூடாக்கி அதில் சிறிது சிறிதாக மாவை சேர்த்து பொறித்து எடுக்கவும்.
அவ்வளவுதான் சுவையான உருளைக்கிழங்கு, வெங்காய பக்கோடா தயார்.
இதனை கெட்சப் அல்லது டீ, காபி உடன் சேர்த்து சாப்பிடலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -