TVK Vijay : தவெக சார்பில் நடைப்பெற்ற பரிசு வழங்கும் விழா வெற்றிகரமாக முடிந்தது!
10 மற்றும் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா ஜுன் 28 ஆம் தேதி நடந்தது. அதன் தொடர்ச்சியாக இன்றும் பரிசு வழங்கும் விழா நடந்தது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஆளப்போறான் தமிழன் பாடல் ஒலிக்க நடிகர் விஜய் மேடையில் ஏறினார். “எதுவும் பேச வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால், நீட் பற்றி பேச வேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டுதான் வந்தேன். நீட்டால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்” என விஜய் பேச தொடங்கினார்.
தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நீட் விலக்கை ஒன்றிய அரசு நீட் விலக்கு தர வேண்டும். இதற்கு தீர்வாக முதலில் கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும்” - விஜய்
இடைக்கால தீர்வு வேண்டுமென்றால், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை திருத்தி, சிறப்பு பொது பட்டியலை உருவாக்கி, அதில் கல்வி மற்றும் சுகாதராத்தை சேர்க்க வேண்டும்” - விஜய்
மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருந்தாலும் அது ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கு” - விஜய்
நீட் தேர்வை பற்றி பேசிய பின்னர், மாணவர்களுக்கு ஒன்றின் பின் ஒன்றாக பரிசு வழங்கப்பட்டது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -