Natarajan Movies : நடராஜனின் வெறித்தனமான லைன்அப்ஸ்!
சிறுத்தை சிவா இயக்கி வரும் கங்குவா படத்தில் நடராஜன் நடித்துள்ளார். படத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்லும் ஒரு சுவாரஸ்யமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறியுள்ளார்.
பிரிட்டோ ஜே பி இயக்கத்தில் உருவாகி வரும் படம் நிறம் மாறும் உலகில். நடராஜன், பாரதிராஜா , ரியோராஜ், சாண்டி மாஸ்டர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்கள். இது ஒரு ஆந்தாலஜி படம் என நடராஜன் கூறியுள்ளார்.
ஆர் ஜே பாலாஜி நடிக்க ஒப்பந்தமாகியுள்ள படம் சொர்க்கவாசல் . இப்படத்தில் நடராஜன், செல்வராகவன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். நட்புக்காக இந்த படத்தில் நடிக்கிறேன் என்று கூறியுள்ளார் நடராஜன்.
ஹிப் ஹாப் தமிழா ஆதியுடன் ஒரு புதிய படத்தில் நடிக்கிறேன். அந்த படத்திற்கு மூன்றாம் உலக போர் என்று பெயரிடப்பட்டுள்ளது என நடராஜன் தெரிவித்துள்ளார்.
எம் ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி தற்போது நடித்து வரும் படம் பிரதர். இப்படத்தில் நடராஜன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
விஜயின் 69 வது படத்தை H வினோத் இயக்கவுள்ளதாக தகவல் பரவிவருகிறது. இந்த படத்திலும் நடராஜன் நடிக்க உள்ளத்தக்க கூறப்படுகிறது