Parthiban Relief Aid : ‘வெட்கக்கேடு...’ மக்களின் கவனத்தை ஈர்த்த பார்த்திபனின் பதிவு!
இயக்குநரும் நடிகருமான பார்த்திபன், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியுள்ளார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசென்னை சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகை அருகில், அங்குள்ள மக்களுக்கு உணவு வழங்கியுள்ளார்.
அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பை தனது யூடியூப் பக்கத்தில் வீடியோவாக ஷேர் செய்துள்ளார்
“த(க)ண்ணீரும் சோகமும் வடியும் வரை… இயன்றதை அனைவரும் செய்வோம். இன்று மதியம் சைதை பனகல் மாளிகை அருகே, சுவையான உணவு வழங்கினோம்.அவர்கள் பசியின் தாக்கம் என்னைத் தின்றது.நான் ஒரு குட்டியானை எனப்படும் மூனேமுக்கால் சக்கர வாகனத்தில் சென்றேன்.எனவே சுருங்கிவிட்டது என் பயணமும் பயனாளிகளும். படகு இருந்தால் மட்டுமே பல பகுதிகளுக்கு செல்ல முடியும் ஆகையால் நாளை அதற்கான முயற்சி. நாளைய விஞ்ஞான வளர்ச்சியை பெருமையாக பார்க்கும் நாம்,அதையெல்லாம் துடைத்து தூர போட்டுவிட்டு, தனியொருவனுக்கு(அதுவும் தண்ணீர் வயிறளவு ஓடும் போது)உணவில்லையெனில்.. வெட்கக்கேடு!ஜெய்ஹிந்த்!” என்ற உருக்கமான பதிவும் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
அதை தொடர்ந்து அவரின் எக்ஸ் பக்கத்தில் நீண்ட ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
மிக்ஜாம் புயல் பாதிப்பு குறித்த பார்த்திபனின் இந்த பதிவு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -