Vijay on Michaung Effects : 'கைக்கோர்போம் துயர்துடைப்போம்..' மிக்ஜாம் பாதிப்பு குறித்து பதிவிட்ட விஜய்!
மிக்ஜாம் புயல் காரணமாக ஞாயிற்றுக்கிழமையில் இருந்து தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது.
ரெட் அலர்ட் கொடுக்கப்பட்ட அனைத்து இடங்களிலும் வரலாறு காணாத மழை பெய்தது. 2015 ஆம் ஆண்டில் பெய்த மழையை விட, நடப்பாண்டில்தான் மழை அதிகமாக பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து பெய்த பேய் மழையால், சாலைகளில் தண்ணீர் தேங்கியது. வீட்டிற்குள்ளும் தண்ணீர் புகும் அவலநிலை ஏற்பட்டது.
பாதிக்கப்பட்ட இடங்களை சேதத்திலிருந்து மீட்க அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. தனி நபர்களும் சமூக ஆர்வலர்களும் பல உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் விஜய் மிக்ஜாம் புயல் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார். பாதிப்புகளை குறித்து பதிவிட்ட விஜய் “கைக்கோர்போம் துயர்துடைப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
லியோ படத்திற்கு பின்னர் ஏஜிஎஸ் வழங்கும் வெங்கட் பிரபுவின் தளபதி 68 படத்தில் விஜய் பிசியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது