Christmas Celebration 2023 : தேவாலயங்களில் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!
கரூர் மாநகரப் பகுதியில் புனித தெரசா குழந்தை இயேசு ஆலயத்தில் கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது
கரூர் வடக்கு பிரதட்சணம் சாலையில் உள்ள புனித தெரசம்மாள் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நள்ளிரவில் நடைபெற்றது.
இதனை முன்னிட்டு சர்ச் வளாகம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
சேலம் நான்கு ரோடு பகுதியில் உள்ள குழந்தைகள் ஏசு பேராலயத்தில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
நள்ளிரவில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த சிறப்பு திருப்பலியை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இதில் சேலம் மறைமாவட்ட பேராயர் அருள்செல்வம் ராயப்பன் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு நடத்தினார்.
கிறிஸ்துமஸ் விழாவையொட்டி நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.