Nonstick Pans: நான்ஸ்டிக் தவாக்கள் சீக்கிரமே வீணாகிப்போயிடுதா? இதையெல்லாம் ஃபாலோ பண்ணுங்க..

. சந்தையில் விற்கும் நான்ஸ்டிக் பேன்கள் ஏராளம். 200 ரூபாய் தொடங்கி 2000 ரூபாய் வரையிலான பேன்கள் உள்ளன. அவற்றைப் பராமரிப்பதுதான் உண்மையிலேயே பெரிய சவாலாக இருக்கிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
நிறைய எண்ணெய்யை வாரி ஊற்ற வேண்டும் என்றில்லை. தோசைக்கல்லில் துணி கொண்டு எண்ணெய்யை தேய்த்து எடுப்பார்களே அந்த அளவுக்கு தேய்த்தால் போதுமானது. எண்ணெய், நெய், வெண்ணெய் என ஏதேனும் ஒன்று கொண்டு பேனை க்ரீஸ் செய்துவிட்டு பயன்படுத்தலாம்.

மரக் கரண்டி அல்லது சிலிகான் கரண்டிகளை மட்டுமே பயன்படுத்துவது பேனின் பயன்பாட்டுக் காலத்தை அதிகரிக்கும்.
நான்ஸ்டிக் பாத்திரங்களைப் பயன்படுத்தி சமைக்கும்போது அடுப்பின் தீயை சிம்மில் வைத்து பயன்படுத்தலாம். இதனால் பாத்திரம் சீராக சூடேறும். இது நான்ஸ்டிக் பாத்திரத்தின் நிறம் மாறாமல் பாதுகாக்கும். மேலும் அதன் மீதுள்ள கோட்டிங் போகாமல் நீடித்து உழைக்கச் செய்யும்
நான்ஸ்டிக் பேனை சுத்தம் செய்வதில் கவனம் தேவை. பேனை பயன்படுத்தியவுடன் அதன் மீது உடனே குளிர்ந்த நீரை ஊற்றக் கூடாது. இது பேனில் தெர்மல் ஷாக் ஏற்படச் செய்யும். இதனால் பேனின் கோட்டிங் வெகு சீக்கிரமே போய்விடும்.
சமைத்து சுத்தம் செய்த பின்னர் நான்ஸ்டிக் பாத்திரங்களை அதற்கென தனியான இடத்தில் வைக்கவும். அதன் மீது வேறு பாத்திரங்களை வைப்பது. அல்லது ஒரு நான்ஸ்டிக் பாத்திரம் மீது இன்னொன்றை வைப்பது போன்ற செயல்களைச் செய்யக் கூடாது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -