Arudra Darshan 2023 : வெகு விமரிசையாக தொடங்கிய சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன திருத்தேரோட்ட திருவிழா!
![Arudra Darshan 2023 : வெகு விமரிசையாக தொடங்கிய சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன திருத்தேரோட்ட திருவிழா! Arudra Darshan 2023 : வெகு விமரிசையாக தொடங்கிய சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன திருத்தேரோட்ட திருவிழா!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/26/ff7cdceb60f089cab8dcd0f183c332246e94f.jpeg?impolicy=abp_cdn&imwidth=800)
கடலூர் மாவட்டம் சிதம்பரம் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவிலில் மார்கழி ஆருத்ரா தரிசன திருவிழா கடந்த 18ஆம் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் ஒன்பதாம் நாள் திருவிழாவான தேரோட்ட திருவிழா காலை தொடங்கியது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App![Arudra Darshan 2023 : வெகு விமரிசையாக தொடங்கிய சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன திருத்தேரோட்ட திருவிழா! Arudra Darshan 2023 : வெகு விமரிசையாக தொடங்கிய சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன திருத்தேரோட்ட திருவிழா!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/26/eb32727b7c7b680aaba7e96ec4420bb21e942.jpeg?impolicy=abp_cdn&imwidth=800)
விநாயகர் தேர் வீதியுலா தொடங்கியதை தொடர்ந்து முருகர், நடராஜர், சிவகாமசுந்தரி தாயார், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட ஐந்து சுவாமிகள் தனி தனி தேர்களில் எழுந்தருளி வீதியுலா வருகின்றனர்.
![Arudra Darshan 2023 : வெகு விமரிசையாக தொடங்கிய சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன திருத்தேரோட்ட திருவிழா! Arudra Darshan 2023 : வெகு விமரிசையாக தொடங்கிய சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன திருத்தேரோட்ட திருவிழா!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/26/451f952fede23a18ac6feef750a535d099c2e.jpeg?impolicy=abp_cdn&imwidth=800)
தமிழகம் முழுவதும் மட்டுமின்றி வெளி மாநில பக்தர்கள் பல்லாயிரக்கணக்காணோர் தேர்களை வடம்பிடித்து இழுத்து வருகின்னர்.
நான்கு வீதிகளிலும் திரண்டுள்ள பக்தர்கள் வீதிகளில் மாக்கோலம் இட்டு சிவ வாத்தியங்கள் இசைத்து சிவதாண்டவங்கள் ஆடி தங்களது பக்தியை வெளிப்படுத்தினர்.
நான்கு வீதிகளில் உள்ள வீடுகள், வணிக நிறுவனங்களில் சுவாமிகளை வரவேற்கும் விதமாக பூரண கும்ப வரவேற்பு அளித்ததுடன் மாவிலை தோரணங்கள் வாழை மரங்கள் கட்டி திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர்.
இதனால் சிதம்பரம் நகரமே விழாக்கோலம் கொண்டுள்ளது. தொடர்ந்து ஐந்து தேர்களும் நான்கு மாடவீதிகளை வலம் வந்து மாலை தேர் நிலையை வந்து அடையும்.விழாவின் முக்கிய நிகழ்வாக கருதப்படும் மார்கழி ஆருத்ரா தரிசன விழா நாளை மதியம் நடைபெற உள்ளது.
image 7
- - - - - - - - - Advertisement - - - - - - - - -