Vessel Washing Tips : சமையல் பாத்திரங்களில் மஞ்சள், மசாலா கறை போகவே மாட்டேங்குதா? உங்களுக்கான டிப்ஸ் இங்கே!
பாத்திரங்களில் கறை படிவது அனைவரது வீட்டிலும் நடக்க கூடிய ஒரு விஷயம்தான். அதற்கு என்ன செய்யலாம்? பாத்திரங்களில் மஞ்சள் கறையை எப்படிப் போக்கலாம்? என்பதை இந்த பதிவில் காணலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇரண்டு கப் தண்ணீரை எடுத்து அதில் 1/4 கப் கிளிசரின், 1/4 கப் திரவ சோப்பு சேர்க்கவும். இந்த கலவையை கொண்டு பாத்திரங்களை சுத்தம் செய்யலாம்.
எலுமிச்சையின் அமிலத்தன்மை அதை சக்தி வாய்ந்த சுத்தப்படுத்தியாக மாற்றுகிறது. இரண்டு பங்கு வெதுவெதுப்பான நீரில் ஒரு பகுதி எலுமிச்சை சாறுடன் கலந்து, உங்கள் கறை படிந்த பாத்திரங்களை கரைசலில் ஒரு இரவு ஊறவைக்கவும். மறுநாள் காலை வழக்கம் போல் சுத்தம் செய்யுங்கள்.
சமையல் சோடா சமையலறையில் மிகவும் பயனுள்ள பொருட்களில் ஒன்றாகும். தண்ணீர் மற்றும் பேக்கிங் சோடாவைக் கொண்டு ஒரு திக்கான பேஸ்ட்டை உருவாக்கவும். அதனை கறையின் மீது பரப்பி, 15 நிமிடம் கழித்து சுத்தம் செய்யவும். கறை சுத்தமாக் நீங்கிவிடும்,
இந்த வெளிர் நீல இரசாயன திரவம் கடினமான கறைகளை அகற்ற உதவுகிறது. கறைகளின் மீது சில துளிகள் தெளித்து, சில நிமிடங்கள் விட்டுவிட்டு கழுவவும்.
உங்கள் உணவுகளில் ரசாயனங்களின் பாதிப்பு இருக்குமோ என்கிற கவலையால் நீங்கள் ரசாயனங்களைத் தவிர்க்க நினைத்தால் அதற்கு சுரிய ஒளி சிறந்த மாற்று. கறைகளை நீக்கும் இயற்கையான முறையான சூரிய ஒளியை முயற்சிக்கவும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -