Year ender 2023 : உலக அளவில் அதிகம் வசூல் செய்த டாப் 5 படங்கள் என்னென்ன?

2023ம் ஆண்டில் உலக அளவில் வெளியாகி அதிக அளவு வசூலையும், விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பையும் பெற்ற டாப் 5 படங்களின் பட்டியல் இதோ :
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
1. Barbie: அனைவருக்கும் மிகவும் பிடித்தமான பார்பி திரைப்படம் உலகளவில் 1.44 பில்லியன் அமெரிக்க டாலர்களை (11,976 கோடி) வசூல் செய்து உலக அளவில் அதிகம் வசூல் செய்த படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. IMDB-யில் 7 புள்ளிகளை பெற்றுள்ளது.

2. The Super Mario Bros.: அனிமேஷன் படமாக வெளியான தி சூப்பர் மேரியோஸ் ப்ரோஸ் திரைப்படம் உலகளவில் 1.36 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (11,311 கோடி) வசூல் செய்து IMDB ரேட்டிங்கின் படி 8.4 புள்ளிகளை பெற்றது.
3. Oppenheimer : கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் சிலியன் மர்ஃபி நடிப்பில் வெளியான ஓப்பன்யெய்மர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. 952 மில்லியன் அமெரிக்க டாலர்களை (7,918 கோடி) வசூல் செய்து IMDB ரேட்டிங்கின் படி 8.4 புள்ளிகளை பெற்றது.
4. Guardians of the Galaxy Vol. 3: ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்ற கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி - 3ம் பாகம் 845.55 மில்லியன் அமெரிக்க டாலர்களை (7,032 கோடி) வசூல் செய்தது. IMDB ரேட்டிங்கின் படி 7.9 புள்ளிகளை பெற்றுள்ளது
5. Fast X: கார் ரேஸை மையமாக வைத்து வின் டீசலின் ஃபாஸ்ட் சாகாவின் பத்தாவது பாகமாக வெளியான ஃபாஸ்ட்-X திரைப்படம் 704.87 மில்லியன் அமெரிக்க டாலர்களை (5,862 கோடி) வசூல் செய்தது. IMDB ரேட்டிங்கின் படி 5.8 புள்ளிகளை பெற்றுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -