Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
2024 Celebration : புத்தாண்டையொட்டி தமிழ்நாடெங்கும் நடைப்பெற்று வரும் சிறப்பு வழிபாடு!
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அழகர் கோயில் அருள்மிகு 18-ம் படி கருப்பணசாமி சன்னதியில் சுமார் 300 கிலோ எடையுள்ள 36 பல வண்ணம் கொண்ட மலர்களால் திருக்கதவுகள் மற்றும் சன்னதி முழுவதும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசேலம் மாவட்டத்தில் புகழ்பெற்ற ராஜ கணபதி திருக்கோவிலில் சாமிக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டிருந்தது. இதனை ஏராளமான பொதுமக்கள் அதிகாலை முதல் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.
சேலத்தில் மிகவும் பழமை வாய்ந்த கோவில்களில் ஒன்றான கோட்டை அலகிடுநாதர் திருக்கோவிலில் பெருமாள், ஆஞ்சநேயர் உள்ளிட்ட சாமிகளுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு இருந்தது.
சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோவிலில் மாரியம்மனுக்கு முத்து அலங்காரத்தில் காட்சியளித்து வருகிறார். இதனை திறனாலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
ஆங்கில புத்தாண்டை ஒட்டி உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் திரளான பக்தர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்
கோவில் நிர்வாகத்தின் சிறப்பு ஏற்பாட்டின் படி பக்தர்கள் நெரிசல் இன்றி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மயிலாடுதுறை, கஞ்சாநகரம் புனித அந்தோணியார் ஆலயத்தில் (இந்து சம்பிரதாயபடி) அங்கப் பிரதட்சணம் செய்தும், முட்டி போட்டு நடந்து சென்றும் பிரார்த்தனையில் ஈடுபட்டு புத்தாண்டு வழிபாடு செய்தனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -