Fengal cyclone: ஃபெஞ்சல் புயல் எதிரொலி; வெள்ளத்தில் தத்தளிக்கும் கிராமங்கள்!
வீடூர் அணை அதன் கொள்ளளவான 605 மில்லியன் கன அடியில் (32அடி) 487.52 மில்லியன் கன அடியை (30.5அடி) நிரம்பியது அணைக்கு வினாடிக்கு 36, 203 நீர்வரத்து வரத் தொடங்கியது. இதையடுத்து அணை கண்காணிப்பு அதிகாரிகள் சுற்றுப்புற கரையோர கிராம மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை கொட்டித் தீர்த்தது வருகிறது. மேலும் வீடுர் அணை திறக்கப்பட்டு வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மரக்காணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கானிமேடு , மண்டகப்பட்டு, கொள்ளுமேடு, அசப்போர், நல்லம்பாக்கம், ராய நல்லூர், கந்தம் பாளையம் நகர் ஆகிய கிராமங்கள். இந்த கிராமங்களுக்கு இடையில் செல்கிறது ஓங்கூர் ஆறு. ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு ஆத்தங்கரையோரம் உள்ள கிராமங்களான கானிமேடு, மண்டகப்பட்டு, ராயநல்லூர், அசப்போர் ஆலத்தூர் உள்ளிட்ட கிராமங்களிலும் புகுந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியிருக்கும் மக்களை மீட்கும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத அளவு வகையில் 49 செ.மீட்டர் மழை கொட்டித் தீர்த்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால், விழுப்புரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் மழைநீர் இன்னும் வடியாமல் உள்ளது
தண்ணீரில் தத்தளித்து வரும் மக்களுக்கு உதவும் வகையில் நிவாரண முகாம்களில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் நீர்நிலைகளின் கரையோரம் தங்கியிருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு முன்னெச்சரிக்கையாக ஏற்கனவே மாற்றப்பட்டனர். அவர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -