Rashmika Mandanna:“தேசிய விருது கிடைக்கும்.”-புஷ்பா திரைப்பட நாயகி ராஷ்மிகா மந்தனா நெகிழ்ச்சி!
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரரான அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள புஷ்பா படத்தின் இரண்டாவது பாகம் டிசம்பர்-5 ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. புஷ்பா படத்தின் முதல் பாகத்திற்கு தனியே ரசிகர் பட்டாளமே உண்டு. ரசிகர்கள் புஷ்பா -2 திரைப்படம் வெளியாகும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகீத கோவிந்தம் என்ற தெலுங்கு படத்தில் நடித்து தெலுங்கில் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. தொடர்ந்து தெலுங்கில் முன்னணி படங்களில் நடித்திருக்கிறார். புஷ்பா படத்தில் வரும் ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் ரசிகர்களின் ஃபேவரைட்டாக மாறிபோனது.
புஷ்பா படத்திற்கு 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக தகவல் தொடர்பாக, ராஷ்மிகா மந்தனா கூறியிருப்பதாவது, “ எனது சம்பளம் பற்றி வரும் தகவல்களில் உண்மை இல்லை. அது வெறும் வதந்திதான். படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் இயக்குனர் சுகுமார் ஈடுபட்டிருப்பதால் ப்ரமோஷன்களில் அவர் பங்கேற்கவில்லை. புஷ்பா படத்தில் நடித்ததற்காக அல்லு அர்ஜூனுக்கு தேசிய விருது கிடைத்தது. புஷ்பா 2ம் பாகத்தில் நடித்ததற்காக எனக்கு விருது கிடைக்குமா? என்று கேட்கிறீர்கள். ஒருவேளை கிடைத்தால் கிடைக்கும் என்று நம்புகிறேன்” இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
புஷ்பா படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஸ்ரீவள்ளி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முழுக்க முழுக்க கிராமத்து பெண்ணாக இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்தப் படத்தில் இருந்து Peelings பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா படம் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளதால், புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சுகுமார் இயக்கியுள்ள இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
புஷ்பா- 2 படத்திற்கான ஓடிடி உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் நெட்ஃப்ளிக்ஸில் இந்த படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதன் மதிப்பு மட்டும் ரூபாய் 270 கோடி ரூபாய் அளவிற்கு என்று கூறப்படுகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -