’எங்கள் ஆற்றைத் திரும்பக் கொடுங்க!’ - TANGEDCOவுக்கு எதிராக எண்ணூர் மக்கள்!
எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் ஆற்றுப் போக்குவரத்துப் படுகையை மணல் கொட்டி ஆக்கிரமித்துள்ளதாக அந்தப் பகுதியின் காட்டுக்குப்பம் கிராம மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇதுதொடர்பாக மணல்கொட்டி ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதியில் நேற்று அந்தப் பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர்.
காட்டுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித் (34), தனது பத்து வயதிலிருந்து மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருபவர். அனல்மின் நிலையத்தின் சாம்பல் கழிவுகள் ஆற்றில் கலக்கிறது. அந்த நீரில் ஐந்து நிமிடம் நின்றால் உடலில் எரிச்சலும் அரிப்பும் ஏற்படுகிறது. ஆற்றை ஆக்கிரமிப்பதால் தற்போது மீன் பிடிக்கும் பகுதியும் கழிவுகளால் பாதிப்படைந்து மீன்பிடி தொழிலே அழியும் அபாயத்தில் இருப்பதாகக் கூறுகிறார்.
மணல் கொட்டப்பட்டதை எதிர்த்து போராட்டத்தில் சிறுவர்களும் பங்கேற்றனர்.
ஆற்றுப்போக்குவரத்தை மறித்து மணல் கொட்டி அடைக்கப்பட்ட பகுதி
போராட்டத்தில் குடும்பமாகக் கலந்துகொண்ட மக்கள்
தங்களுக்கு தீர்வு கிடைக்கும்வரை அந்த இடத்திலிருந்து நகரப்போவதில்லை என உறுதியுடன் நின்றிருந்த மக்கள்
போராட்டத்தின் ஒரு பகுதி. பகிர்மானக் கழகத்தின் கட்டுமான பணிகளை தற்காலிகமாக நிறுத்தி, விசாரணை மேற்கொள்ள பரிந்துரைத்து தாசில்தார் வாக்குறுதி அளித்ததன் அடிப்படையில் போராட்டத்தில் ஈடுபட்ட 250-கும் மேற்பட்ட எண்ணூர் மீனவர்கள் கலைந்து சென்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -