CM Stalin Honours Scientists : தமிழ்நாட்டை சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானிகளை கெளரவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!
விண்வெளித்துறையில் சாதனை படைத்த தமிழ்நாடு விஞ்ஞானிகளுக்கு அரசு தரப்பில் சென்னை கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஉயர் கல்வித்துறையின் சார்பில் ஒளிரும் தமிழ்நாடு மிளிரும் தமிழர்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த பாராட்டு விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.
இந்த பாராட்டு விழாவில், இஸ்ரோ முன்னாள் தலைவர்கள் மயில்சாமி அண்ணாதுரை, சிவன் மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் நாராயணன், ராஜராஜன், சங்கரன், ஆசிர் பாக்கியராஜ், வனிதா, நிகர் ஷாஜி, சந்திரயான் -3 திட்டத்தின் திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் உள்ளிட்டோர் கெளரவிக்கப்பட்டனர்.
இஸ்ரோ விண்வெளி திட்டங்களில் முத்திரை பதித்து, இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை ஏற்படுத்திக் கொடுத்த, தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகளுக்கு தலா ரூ.25 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின், இஸ்ரோ விண்வெளிகளுடன் கலந்துரையாடிய போது...
ராக்கெட், லேண்டர் மாதிரிகளுக்கு மத்தியில் நின்று முதல்வர் ஸ்டாலின் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
முதலமைச்சர் ஸ்டாலினுடன் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு, எ.வ வேலு, பொன்முடி, துரைமுருகன்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -