Thalapathy 68 Update : தளபதி 68 படத்தில் ரீ என்ட்ரி கொடுக்கும் மைக் மோகன்.. விஜய் படத்தின் புது அப்டேட்ஸ் இங்கே!
ஏஜிஎஸ் தயாரிப்பில், வெங்கட் பிரபு - விஜய் - யுவன் ஷங்கர் ராஜா கூட்டணியில் உருவாகி வரும் படம் தளபதி 68. முன்னதாக, தயாரிப்பு பணிகளையொட்டி லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு விஜய், வெங்கட் பிரபு சென்று இருந்தனர்.
இந்நிலையில் படத்தின் பூஜை, சென்னை வடபழனியில் உள்ள பிராசாத் லேப் ஸ்டியோஸில் இன்று நடைப்பெற்றுள்ளது.
அக்டோபர் 3 ஆம் தேதியான நாளை சென்னையில் முதல் கட்ட படப்பிடிப்பு ஆரம்பமாகிறது என சொல்லப்படுகிறது.
இந்த ஷூட், அக்டோபர் 16ஆம் தேதி முடிவடைந்தவுடன், சின்ன இடைவேளைக்கு பின்னர் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் தொடங்கும் என்றும் கூறுப்படுகிறது.
விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி எனும் நடிகை நடிக்கவுள்ளார் என்ற தகவல் பரவி வருகிறது.
அத்துடன், 80களில் சினிமாவை கலக்கி வந்த மைக் மோகனும் இந்த படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கிறார் என்று நெருங்கிய திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படம் 2024ஆம் ஆண்டின் கோடை விடுமுறைக்கு வெளியாகலாம்.