Summer Heat : மக்களை வாட்டி வதைக்கும் வெயில்..தமிழ்நாடு தீப்பிழம்பாய் கொதிக்க இதுதான் காரணமா?
தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக அனேக இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இயல்பை விட தமிழ்நாட்டில் 2-4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கிறது
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதமிழ்நாட்டில் சுமார் 20 மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது
சமீபத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் மோக்கா புயல் உருவானது. இந்த புயல் வங்க தேசம் மற்றும் மியான்மர் இடையே அதி தீவிர சூறாவளி புயலாக கரையை கடந்தது.
இந்த புயலானது காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை இழுத்து சென்றதால் வறண்ட காற்று நிலவி வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் வெப்பநிலை அதிகரித்துள்ளது.
இந்த காரணத்தினால் வெப்பத்தின் தாக்கம் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகமாக உணரப்பட்டு இருக்கிறது
அதுமட்டுமல்லாமல் கத்திரி வெயிலின் போது இயல்பைவிட வெப்பநிலை அதிகமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -