Google : கூகுள் நிறுவனம் வெளியிட்ட புதிய அறிவிப்பால் ஷாக்கான பயனாளர்கள்
குறைந்தது 2 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாத அல்லது உள்நுழையாமல் இருக்கும் தனிப்பட்ட கூகுள் கணக்குகள் நீக்கப்பட இருக்கின்றன.
உலகளவில் பில்லியன் பயனர்களின் கணக்குகளை கொண்ட கூகுள், கடந்த இரண்டு ஆண்டுகள் மற்றும் அதற்கு மேலாக பயன்படுத்தப்படாத கணக்குகளை நீக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது
இந்த கொள்கை மூலம் இமெயில், யூடியூப், கூகுள் டிரைவ் மற்றும் பிற கூகுள் கணக்குகளில் உள்ள புகைப்படங்கள் நீக்கப்படும் என்றும், இந்த பயன்படுத்தப்படாத கணக்குகள் அனைத்தும் 2023ம் ஆண்டுக்குள் நீக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த கொள்கையானது தனிப்பட்ட கூகுள் கணக்குகளுக்கு மட்டுமே பொருந்தும். பள்ளிகள் அல்லது வணிக நிறுவனங்களுக்கு இது பொருந்தாது
கணக்கு இருந்ததையே மறந்துவிட்ட அல்லது கவனிக்கப்படாத கணக்குகளை எளிதில் ஹேக் செய்யலாம். அதை தடுக்கும் நடவடிக்கையாக இந்த கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது
நேற்று முதல் இந்த கொள்கை அமலுக்கு வந்தாலும் இந்த ஆண்டு இறுதியில் கணக்குகளின் நீக்கம் தொடங்கப்படும் எனக் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது