Animal Based Movies : எலி முதல் குதிரை வரை.. மிருகங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தமிழ் படங்கள்!
பக்ரீத்: விக்கராந்த் நடித்த இந்தப் படம் பெரிதாக கவனத்தை ஈர்க்கவில்லை. எதிர்பாராமல் தன் வீட்டிற்கு வந்த ஒட்டகத்தை மறுபடியும் ராஜஸ்தானில் அதன் குடும்பத்திற்கு கொண்டு சேர்க்கும் கதை.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appநான் ஈ : ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் காதலித்து வர, அப்பெண் மீது ஆசைப்படும் வில்லன், அந்த பையனை கொன்றுவிடுவான். இறந்தவனின் ஆவி ஒரு ஈக்குள் புகுந்து அந்த வில்லனை பழிவாங்குவதுதான் கதை.
அழகர் சாமியின் குதிரை : கோவில் குதிரை காணாமல் போக, ஹீரோவான அழகர் சாமியின் குதிரையை பிடித்து செல்கிறார்கள் கோயில் அதிகாரிகள். தனது பாசமான குதிரையை திரும்பப்பெற அப்புகுட்டி என்னவெல்லாம் செய்கிறார் என்பதே கதை.
மான்ஸ்டர்: பேசியே அனைவரையும் குழப்பும் எஸ்.ஜே.சூரியாவிற்கு முதல் பாதியில் மான்ஸ்டர் போல் ட்ஃப் கொடுக்கும் எலி, இரண்டாவது பாகத்தில் கதாநாயகனை பரிதாபப்பட வைத்துவிடும்.
நாய்கள் ஜாக்கிரதை : நாய்கள் மனிதர்களுக்கு உதவி செய்வது ஒன்றும் புதிது இல்லை. போலீஸாக இருக்கு சிபிராஜிற்கு உதவி செய்யும் சுப்பிரமணி எனும் நாய் அப்ளாஸை அள்ளியது.
ஒரு கிடாயின் கருணை மனு: தலையில் மஞ்சள் தண்ணி ஊத்தி வெட்டபோகும் நேரத்தில் எதிர்பாராமல் நடக்கும் ஒரு சம்பவமே இக்கதையின் க்ளைமாக்ஸ்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -