Jet : ஜெட்டில் இருந்து வரும் வெள்ளைக்கோட்டின் பின் இருக்கும் அறிவியல் என்ன?
விமானம் வானத்தில் சென்றால் அனைவரும் ரசித்து பார்ப்பார்கள். அதே ஜெட் விமானம் சென்றால் சொல்லவே தேவையில்லை அந்த வெள்ளை நிற கோடை பற்றி தான் அனைவரும் பேசுவார்கள்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஜெட் விமானம் வானத்தில் கடந்து சென்ற பிறகு வானத்தில் வெள்ளை நிற புகைக்கோடுகள் தெரியும். அது விமானத்தில் இருந்து வெளி வரும் புகை என்று நினைத்திருதோம் உண்மையில் அது புகை அல்ல.
ஜெட் போன்ற அதிவேக இன்ஜின் கொண்ட விமானங்களில் இருந்து நீராவி வெளியேற்றப்படுகிறது. நடுவானில் வெளியாகும் நீராவிகள் குளிர்ந்த காற்றுடன் கலந்து பனிதுளிகளாக உருவாகிறது.
பல்லாயிரம் அடி உயரத்தில் ஜெட் விமானங்கள் சூடான நீராவியை வெளியேற்றும்போது, காற்றில் உள்ள குளிர்ச்சியால் உறைந்து போகிறது.
அந்த உறைந்து போன நீராவிகள் உறைபனியாக சிறிது நேரம் நின்றுவிடுகின்றன. நாம் கீழிலிருந்து பார்க்கையில் வெள்ளை நிற புகைக்கோடுகளாக தெரிகின்றன
இதுவே ஜெட் விமானத்திலிருந்து வெளிவரும் வெள்ளை நிற கோடுகளின் அறிவியல் உண்மை. வானம் குளிர்ச்சியாக இல்லாதபோது, வெள்ளை நிற கோடுகளை காண முடியாது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -