DMK Youth Wing Meeting : முழுவீச்சில் நடக்கும் திமுக இளைஞரணி 2வது மாநில மாநாட்டிற்கான ஏற்பாடுகள்!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்துள்ள பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (21 ஆம் தேதி) நடைபெற உள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
மாநாடு மைதானத்தின் முகப்பில் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரது முகங்கள் பதிக்கப்பட்ட கோட்டை போன்று அமைக்கப்பட்டுள்ளது.

மாநாடு மைதானத்தில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பெயரில் அமைக்கப்பட்டுள்ள 100 அடி கொடிக்கம்பம் மற்றும் பெரியார், அண்ணா, கலைஞர், அன்பழகன் முழு உருவ சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது.
மாநாடு நடக்கும் மைதானத்தில் சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டுள்ளது
சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகளில் இருபுறமும் பேனர்கள், திமுக கொடிகள் மாநாட்டிற்கு வருகை தருபவர்களை வரவேற்க வைத்துள்ளனர்.
இதற்கான ஏற்பாடுகளை திமுகவின் முதன்மை செயலாளர் கே.என்.நேரு பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -