Suriya Wishes : உங்கள் பணி இதயங்களை வென்றுள்ளது : அயலான் படத்தை வாழ்த்திய சூர்யா!
இன்று நேற்று நாளை இயக்குநர் ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத் சிங் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான படம் அயலான்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசைன்ஸ் ஃபிக்ஷன் படமான இது பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த ஜனவரி 12 ஆம் தேதியன்று வெளியானது.
தொடர் விடுமுறை நாட்களில் படம் வெளியானதால், குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியை பெற்றது அயலான். குறிப்பாக குழந்தைகள் இப்படத்தை விரும்பி பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில், அயலான் படத்தின் வி எஃப் எக்ஸ் வேலைப்பாடுகள் சிறப்பாக இருந்ததாக, நடிகர் சூர்யா ஃபாண்டம் நிறுவனத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பூங்கொத்துடன் அனுப்பப்பட்ட அந்த வாழ்த்து கடிதத்தில், “ஃபாண்டம் குழுவினர் செய்த வி எஃப் எக்ஸ் எனக்கு பிடித்துள்ளது. எதையும் சிறப்பாக செய்ய வேண்டும் என்ற உங்கள் தாகத்தை வெளிப்படுத்தும் விதமாக இது அமைந்துள்ளது. எங்கள் அனைவரின் இதயங்களையும் உங்கள் பணி வென்றுள்ளது.”என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஃபாண்டம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் பிஜாய் அற்புதராஜ் எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்துள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -