TVK Maanadu:த.வெ.க. மாநாடு; கொள்கை என்ன? விஜய் பேசியது என்ன?
ஒவ்வொரு கட்சி ஆரம்பிக்கும்போது அதன் தலைவர்கள் கொள்கைகளை வெளியிடுவர். ஆனால் தவெக சற்று வித்தியாசமாக கொள்கைகளை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து விஜய் கூறுகையில், “ஒரு கட்சிக்கு ரொம்ப முக்கியம் கொள்கைகளும், தொண்டர்களும். ஒரு கட்சிக்கு கொள்கைகள் எவ்வளவு முக்கியமோ அதே அளவு தொண்டர்களும் அவ்வளவு முக்கியம். நானும் அந்த தொண்டர்களில் ஒருவன்தான். கொள்கைகளை தலைவர்தான் அறிவிக்க வேண்டும் என அவசியம் இல்லை என தெரிவித்தார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇதையடுத்து தமிழக வெற்றிக்கழகத்தின் பொருளாளர் சம்பத்குமார் அக்கட்சியின் கொள்கைகளை வெளியிட்டார். அப்போது பேசிய அவர், “பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும். பிறப்பில் எல்லா உயிர்களும் சமம். மதம், சாதி, இனம், பாலின அடையாளம் இல்லாமல் எல்லோர்க்கும் எல்லாம் என்பதை உருவாக்குவதே தவெகவின் கொள்கை. தமிழ், ஆங்கிலம் என இருமொழிக்கொள்கையை தவெக பின்பற்றும். அதில் தமிழே ஆட்சி மொழி.
ஊழலற்ற நிர்வாகத்தை கொண்டு வருவது தவெகவின் கொள்கை. ஆண், பெண், மூன்றாம் பாலினத்தவர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரை சமமாக நடத்துவதே கொள்கை. அனைவருக்கும் விகிதாச்சாரப்படி இட ஒதுக்கீடு வழங்குவதே சமூக நீதி என்பது தவெகவின் கொள்கை” எனத் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து, மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டிருந்த கம்பத்தில் கட்சியின் கொடியை தவெக தலைவர் விஜய் ஏற்றி வைத்தார். பின்னர், கட்சியின் அரசியல் வழிகாட்டிகள் அறிவிக்கப்பட்டனர். அதன்படி, பெரியார், அம்பேத்கர், காமராஜர், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோர் கட்சியின் அரசியல் வழிகாட்டிகளாக இருப்பார்கள் என கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
வெற்றி வெற்றி எனத் தொடங்கும் இந்த பாடலை திரைப்பட ராப் பாடகர் அறிவு பாடியுள்ளார். அறிவின் தனித்துவமான ராப் ஜானரில் விஜயின் அரசியல் கொள்கைகளை வெளிப்படுத்தும் பாடல்வரிகள் என இந்த பாடல் ரசிகர்களை கவர்ந்தது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -