Himachal Results 2022: இமாச்சலில் ஆட்சி அமைக்கும் காங்கிரஸ்?..அதிர்ச்சியடைந்த பாஜக!
தொடர் தோல்விகளை சந்தித்து வரும் காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் அளிக்கும் விதமாக இமாச்சல பிரதேச தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளது.கடந்த நவம்பர் 12ஆம் தேதி ஒரே கட்டமாக அங்கு மொத்தமுள்ள 68 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅதில், 39 இடங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருகிறது. பாஜக 26 இடங்களிலும் பிற கட்சிகள் 3 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.
பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவிய போதிலும், ஒரு கட்டத்திற்கு பிறகு, காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக சூழல் மாறியது.
25 ஆண்டு கால இமாச்சல பிரதேச அரசியலை பாஜகவின் பிரேம் குமார் துமாலும், காங்கிரஸ் கட்சியின் வீரபத்ர சிங்கும் ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.
இரண்டு மூத்த தலைவர்களில் ஒருவரான வீரபத்ர சிங், கடந்த 2021ஆம் ஆண்டு காலமானார்.
தற்போது, நிலவும் சூழ்நிலையில், முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் பிரதிபா சிங்கும், காங்கிரஸ் தேர்தல் பிரச்சார குழுவின் தலைவரான சுக்விந்தர் சிங் சுக்குவும் உள்ளதாகக் கூறப்படுகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -