Governor RN Ravi : மின்னல் போல் வந்து சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி.. சட்டசபை கூட்டத்தொடரில் நடந்த சம்பவம் என்ன?
நடப்பாண்டிற்கான சட்டசபை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதமிழ்நாடு அரசு தயாரித்து வழங்கும் உரையை ஆளுநராக பதவி வகிப்பவர்கள் வாசிப்பது மரபு. ஆனால், ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசின் உரையை படிக்காமல் புறக்கணித்தார்.
தேசிய கீதம் முதலில் இசைக்கப்பட வேண்டும் என ஆளுநர் கேட்டுக்கொண்டார். அவரது கோரிக்கை நிறைவேற்றப்படாததால், ஆளுநர் ரவி, சபைக்கு வணக்கத்தை தெரிவித்துவிட்டு திருக்குறள் ஒன்றை வாசித்திவிட்டு அமைதியாக அமர்ந்து கொண்டார்.
தமிழ்நாடு அரசின் உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்து கொண்டிருந்த போது, “ தேசிய கீதம் குறித்த ஆளுநர் கோரிக்கை தொடர்பாக கடந்த ஆண்டே பதில் அளித்துவிட்டோம். கூட்டத்தொடர் தொடங்கும்போது தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதம் பாடுவதே அவையின் மரபு. ஆளுநர் மனதில் இருப்பதை கூறியுள்ளார். அதுபோல் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவர் மனதிலும் ஒன்றும் உள்ளது. மத்திய அரசிடம் இருந்து ரூ.50,000 கோடி பெற்றுத்தருவாரா ஆளுநர்? சாவர்க்கர், கோட்சே வழிவந்தவர்களுக்கு தமிழ்நாடு மக்களும், சட்டமன்றமும் சற்றும் சளைத்தவர்கள் இல்லை” என குறிப்பிட்டார்.
இதன் பின்னர், ஆர்.என்.ரவி அவை முடியும் முன்னரே மின்னல் வேகத்தில் வெளியேறினார். அப்போது, சபாநாயகர் அப்பாவு இருங்க.. இனிதான் ஆளுநர் ஜனகனமண பாடுவோம் என்று கூறினார். இதனால், அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.
கடந்தாண்டு ஜனவரி 9 ஆம் தேதியன்று நடந்த சட்டசபை கூட்டத்தொடரிலும் இதே போல அவையின் நடுவிலே, வெளியேறினார் ஆர்.என்.ரவி.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -