கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு பின் நடந்த தேமுதிகவின் முதல் மாவட்ட செயலாளர் கூட்டம்!
நடிகர் மற்றும் அரசியல் தலைவருமான விஜயகாந்தின் மறைவுக்கு பின்னர் தேமுதிக அலுவலகத்தில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைப்பெற்ற அந்த கூட்டத்தில், கட்சி தொடர்பான விஷயங்களும் வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்த விஷயங்களும் ஆலோசிக்கப்பட்டது.
அவர்களுள் சிலர் தனித்து போட்டியிடலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். விஜயகாந்த் இல்லாமல் முதல் தேர்தலை சந்திக்கும் தேமுகவினர், யார் அதிகமாக தொகுதி கொடுக்கிறார்களோ அவர்களுக்குடன் கூட்டணி வைப்போம் என தெரிவித்துள்ளனர்.
அதிமுக அல்லது பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஒரு ராஜ்ஜிய சபா மற்றும் லோக் சபாவுக்கு அதிக இடங்களை ஒதுக்குகிறார்களோ அவர்களுடன் களம் காண தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
தேர்தல் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை இன்னும் நடைபெறவில்லை என்றும் வரும் 12ம் தேதி தேமுதிகவின் மண்டல பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது என்றும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -