Rekla Race 2024 : திருக்கடையூரில் தொடங்கிய உலக புகழ் பெற்ற ரேக்ளா ரேஸ்!
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் ஆண்டுதோறும் காணும் பொங்கல் அன்று 8 ஊராட்சிகள் சார்பில் மாடு மற்றும் குதிரை வண்டிகளுக்கான எல்கை பந்தயம் நடைபெறுவது வழக்கம்
இப்போட்டியில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்கள் போட்டியில் கலந்து கொள்வார்கள்.
பாரம்பரியமாக நடைபெற்று வந்த இந்த எல்கை பந்தயம் கடந்த ஆண்டுக்கும் முந்தைய மூன்று ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் தடைப்பட்டு இருந்தது.
இந்தாண்டு 44 வது ஆண்டாக காணும் பொங்கல் அன்று எல்கை பந்தயம் நடத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் திருக்கடையூரில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து இன்று காணும் பொங்கல் தினத்தில் குதிரை மாடுகளுக்கான எல்கை பந்தயம் 44 -ம் ஆண்டாக நடைபெற்று வருகிறது.
இதில் மயிலாடுதுறை மாவட்ட மற்றும் இன்றி இப்போட்டியில் பங்கேற்கும் பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த போட்டியாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தொடர்ந்து காலை 8 மணிக்குச் சிறிய மாடுகளுக்கான பந்தயம் நடைப்பெற்றது. பின்னர் மதியம் 12 மணிக்கு நடு மாடுகள், பெரிய மாடுகளுக்கான பந்தயம் நடைப்பெற்றது
குதிரைகளுக்கான ரேக்ளா ரேஸ் மதியம் 1.30 மணிக்கு நடைபெறும். இதனை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திருக்கடையூரில் குவிந்துள்ளனர். தொடர்ந்து வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட உள்ளனர். முன்னதாக கால்நடை மருத்துவர் குழுவினர் பேட்டியில் பங்கேற்கும் மாடு மற்றும் குதிரைகளை பரிசோதனை செய்து தகுதி சான்றுகள் வழங்கி பேட்டிகளுக்கு அனுமதித்தனர். ரேக்ளா பந்தயத்தை அடுத்து பாதுகாப்பு பணியில் சுமார் 300 -க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுத்தபட்டுள்ளனர்.