Dosa Batter : மொறு மொறு தோசை வேணுமா? அப்போ மாவை இப்படி அரைச்சு பாருங்க!
முறுகல் தோசை சிறுசு முதல் பெருசு வரை எல்லோருக்கும் ஆல்டைம் ஃபேவரைட்
இல்லீங்க 4 ஈஸி ஸ்ட்பெஸ் ஃபாலோ பண்ணா போதும், கடை தோசை மாவு பதத்தில் மாவு ரெடியாகிவிடும்.
ஒரு பாத்திரத்தில்’ 2.5 கப் இட்லி அரிசி அல்லது புழுங்கல் அரிசி எடுத்துக் கொள்ளவும். அத்துடன்1/2 கப் பச்சை அரிசி எடுத்துக் கொள்ளவும். இரண்டையும் ஒன்றாக சேர்த்து குறைந்தது 3 முறையாவது கழுவவும். இதனால் தூசி, அழுக்கு எல்லாம் கலையப்படும்.பாத்திரத்தில்1/2 கப் உளுத்தம் பருப்பு, -1/2 தேக்கரண்டி வெந்தயம் எடுத்து ஒன்றாகக் கழுவவும்.
கழுவுவது எவ்வளவு முக்கியமோ அதேபோல் ஊறவைப்பதும் மிகவும் முக்கியம்.
அரிசி மற்றும் உளுந்தம் பருப்பை தனித்தனியாக அரைக்கவும். ஊறவைத்த தண்ணீரைப் பயன்படுத்தி அவற்றை அரைக்கவும்.
அரைத்த உளுத்தம் பருப்பு மற்றும் அரிசி மாவை ஒரு பெரிய பாத்திரத்தில் மாற்றவும். மிருதுவான பேப்பர் ரோஸ்ட் தோசை செய்ய மாவுடன் சிறிது நீர் சேர்க்கலாம்
அவ்வளவுதான் ஹோட்டல் ஸ்டைல் தோசை வீட்டிலேயே ரெடியாகிவிடும்.