Salami Omelette:சுவையான சலாமி ஆம்லெட் -செய்முறை இதோ!
காலை உணவு எளிதாக செய்து ஊட்டச்சத்து நிறைந்து சாப்பிட வேண்டும் என்பவர்களுக்கு முட்டை வேக வைத்து சாப்பிடுவது அல்லது ஆம்லட் சாப்பிடலாம், காய்கறி, இறைச்சி, சீஸ் என அளவோடு காலை உணவை புரோட்டீன், இரும்புச்சத்து என ஆற்றல் தரும் உணவுகளை சாப்பிடலாம்.
காலை உணவில் சர்க்கரை நிறைந்த உணவுகள், இனிப்பு அதிகம் நிறைந்த உணவுகள் சாப்பிட கூடாது என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
ஸ்பானிஷ் ஆம்லெட் சில பகுதிகளில் ஸ்பானிஷ் டார்ட்டிலா (Spanish tortilla) என்றும் அழைக்கப்படுகிறது. இது ஸ்பெயினிலிருந்து வந்த ஒரு பாரம்பரிய உணவு மற்றும் ஸ்பானிஷ் உணவுகளில் பிரபலமான ஒன்றாகும். இந்த ஆம்லெட் முட்டை, வெங்காயம், உருளைக்கிழங்கு, சில காய்கறிகள், சீஸ் மற்றும் முட்டைகளுடன் தயாரிக்கப்படும் ஆம்லெட் வகை ஆகும்.
முதலில் ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்திருக்கும் முட்டைகளை உடைத்து ஊற்றி கொள்ள வேண்டும். பின்னர் அதில் சுவைக்கு ஏற்ப உப்பு மற்றும் மிளகுதூள் சேர்த்து சேர்த்து நன்கு கலக்கி அடிக்கவும். பின்னர் ஒரு பெரிய வாணலியை (skillet pan) அடுப்பில் வைத்து அதில் எடுத்து வைத்திருக்கும் 3 டீஸ்பூன் ஆலிவ் ஆயிலை ஊற்றி சூடாக்கி கொள்ள வேண்டும்.
சூடான ஆலிவ் ஆயிலில் நறுக்கிய உருளைக்கிழங்கை கொட்டி மென்மையாகவும், பொன்னிறமாகவும் கிழங்கு மாறும் வரை வறுக்க வேண்டும். பின்னர் முட்டை கலக்கி வைத்திருக்கும் கிண்ணத்தில் இந்த கலவையை கொட்டி விட வேண்டும்.